பல வருடங்களாக அதிகமான பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த உத்தரவை திருகோணமலை மாவட்டத்தில், கோமரன்கடவல பிரதேச செயலக பிரிவின் கிவுலேகடவல கிராம சேவகர் பிரிவில் உள்ள கிவுலேகடவல வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ 12வது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் காணப்படும் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப அடுத்த வாரம் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *