முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது, இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம்  என பா .உ  இம்ரான் தெரிவிப்பு..!

முஸ்லிம் மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.…

மாணவிகளை வெயிலில் முழங்காலில் நிற்க வைத்த ஆசிரியை.!

சுகயீனம் காரணமாக பாடசாலையில் காலை வேளையில் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகளுக்கு ஆசிரியை தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

சீனா : குய்யாங் நகரை புரட்டி போட்ட சக்தி வாய்ந்த புயல்!

சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்தது. மேலும் ஆயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.…

காசாபள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 23 பேர் பலி

காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும்,…

பாடசாலை உணவுத் திட்டத்திற்கு ரூ. 32 பில்லியன் ஒதுக்கீடு

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் பள்ளி மாணவர்களிடையே இரத்த சோகையைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் “பள்ளி ஊட்டச்சத்து திட்டத்தை” தடையின்றித் தொடர அரசாங்கம் கொள்கை முடிவை…

கி.மா. கௌரவ ஆளுநர் கோமரங்கடவல பிரதேசத்திற்கு குறுகிய கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்…!

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கோமரங்கடவல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய ரொஷான் அக்மீமன அவர்களும் (21)…

ஓமனில் இந்திய கப்பலில் யோகா நிகழ்ச்சி

ஓமன் நாட்டின் துகும் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். திர்காந்த் வருகை புரிந்தது. இந்த கப்பலில் சர்வதேச யோகா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: அமெரிக்கா பரிசீலனை

அமெரிக்காவில் குறைந்துவரும் குழந்தை பிறப்பை அதிகரிக்க செய்ய, பெண்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்கவிக்க, ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலனை செய்து…

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: காசாவில் 17 பேர் பலி

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.; இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது…

போலீசாரை மோதி செல்ல முட்பட்ட டிப்பர் மீது துப்பாக்கிச்ச்சூடு..!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்டிருந்த அடம்பன் பொலிஸார் இடை மறித்த…

லண்டனில் இலங்கைத் தமிழருக்கு சொந்தமான கடைக்கு சீல் வைப்பு

பிரித்தானியாவின் லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு சொந்தமான கோழிக்கடையில் சட்டவிரோத தொழிலாளர்கள் பலமுறை கண்டுபிடிக்கப்பட்டதால் அதன் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பெருந்தொகை ஸ்ரேலிங் பவுண்ட் அபாரதமும்…

அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு: சீன விஞ்ஞானிகள் சோதனை வெற்றி

அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, சீனா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. சீன விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத வெடிகுண்டை உருவாக்கும் சோதனையை கடந்த…

சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் பிரதமர்…

இஸ்லாமிய தீவிரவாத  சக்திகளை தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும் என ஞானசார தேரர் அழைப்பு.!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலில் இறந்தவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் நீதி கிடைக்கவும், இந்த நாட்டில் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவும் நாம் ஒன்றுபட வேண்டும் என்று…

பிள்ளையானுக்காக நாமல் கவலையடையும் காரணம் காலப்போக்கில் வெளிவரும்- நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு..!

முன்னால் இராஜங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துறை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள…

🔴𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗡𝗲𝘄𝘀
குச்சவெளி – சாகரபுர பகுதியில் புல்மோட்டை தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கில் விபத்து!!

இன்று 2025-April-21,
03:25 PM மணியளவில் புல்மோட்டையில் இருந்து திருமலை நோக்கி பயணித்த தனியார் பேரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் சலப்பையாறு – கும்புறுப்பிட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய “கிருபாகரன் உஷாந்தன்” ஆவார்.

மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு ஈஸ்டர் தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது – நாமல் குற்றச்சாட்டு!!

துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில்…

இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிபயட்டை 82 வயது மூதாட்டி ஒருவர் தொடர்ந்து கற்றுக் கொடுத்து வருகிறார்!

பண்டைய இந்திய தற்காப்புக் கலையான களரிபயட்டுவை கற்பிக்கும் 82 வயது பெண்மணி ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று கூறுகிறார். “நான் இறக்கும் வரை களரி பயிற்சி…

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி தெரிவிப்பு..!
————————————————————————

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

2019 ஏப்ரல் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரையிலான ஐந்தரை ஆண்டுகள் விசாரணைகள் என்ற போர்வையில் தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கோ 2019 நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கோ இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்கொண்டுவருவதற்கான நோக்கம் இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த அரசாங்கங்களுக்கு உண்மையான சூத்திரதாரிகளை மறைக்க வேண்டிய தேவையே காணப்பட்டதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.

தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.