இலங்கைக்கு வர முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருப்போருக்கான நற்-செய்தி!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செலவில் நாட்டுக்கு திருப்பி அழைக்கவும், தனிமைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் சென்று தமது ஒப்பந்த காலத்தை முடித்துவிட்டு இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஹோட்டல் அல்லது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக, இரண்டு வாரங்களுக்குள் எட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கப்பட உள்ளன

இவ்வாறு புதிய தனிமைப்படுத்தல் மையங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டடங்களின் பட்டியல் கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply