இன்று(7) ஜாயாநகர், குச்சவெளி,அல் இக்றா பாலர் பாடசாலையின் வருடாந்த சந்தை நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது மாணவர்களின் பெற்றோர்கள், ஏனைய பாலர் பாடசாலைகளின் ஆசிிிரியர்களும் பங்கு பற்றிினர்.
மாணவர்கள் தத்தமது கடைகளில் பல் வகையான பொருட்களை விற்பனை செய்தனர் இந்த சிறுவர் சந்தையில் அனைத்து வகையான அத்தியவசியப் பொருட்கள்,குளிர் பானக்கடைகள்,காய்கறி, போன்ற அனைத்துப் பொருட்களையும் கொள்வனவு செய்யக்கூடியதாக அமைந்தது.
மாணவர்களின் உள விருத்தியை ஏற்படுத்தும் நிகழ்வானது வருடாந்தம் நடை பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பாலர் பாடசாலையின் ஆசிரியை இந்நிகழ்வு தொடர்பில் விவரிக்கையில் சந்தைகளில் வியாபாரிகள் தமது பொருட்களை விற்பனை செய்யும்போது அவர்களின் உடைகளைப்போன்று மாணவர்களையும் தயார் படுத்தி இருந்தமை எமக்கு சுட்டிக்காட்டினார் இச் சிிறுவர் சந்தை சுமார் 2மணியளவில் நிிறைவு பெற்றது.