2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தத்தில் தனது இடது காலை இழந்த பெலும்மார உடுகமவில் வசிக்கும் கொமாண்டோ படையணியின் சிப்பாய் கோப்ரல் டபிள்யூ.பி.பி. சம்பத்தின் திருமணம் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக திங்கட்கிழமை (08) இடம்பெற்றது. இத்திருமணத்தின் போது மணமகனின் திருமண பதிவின் சாட்சியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும்இராணுவ தளபதியும்கொவிட் – 19தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கையொப்பமிட்டார்.
இத்திருமணம் இராணுவபுனர்வாழ்பு பணிப்பக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகரவின் ஆலோசனையின் பேரில் சியனேவ அபி எனும் அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோப்ரல் சம்பத் 2007ஆம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், மனிதாபிமான நடவடிக்கைகள் உச்சகட்டத்தை அடைந்திருந்த போது 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் திகதி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி தனது இடது காலை இழந்தார்.
இத்திருமணத்தின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா, அங்கவீன இராணுவ வீரர் சார்பில் கலந்துகொண்டார். சுகாதார அறிவுறுத்தல் காரணமாக மணமக்கள் சார்பில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுடன் திருமண நிகழ்வு இனிதே நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி பிரதம விருந்தினர் பரிசில்கள் வழங்கிவைத்தார். கோப்ரல் சம்பத் 2017ல் இத்தாலியில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளிலும் படகோட்டுதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மணமகள் செல்வி நிலுஷா குமுதுனி தனது தாயிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர், தனது வருங்கால கணவனை வாழ்நாள் முழுவதும் சிறப்பாக கவனித்துக்கொள்வதாக அவரது பெற்றோருக்கு உறுதியளித்தார். இத்திருமணத்தில் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களும் இடம்பெற்றன