இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழக்கூடிய மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக பல உதவிகளை அரசாங்கம், நலன்விரும்பிகள் செய்து வருகின்றனர்.

இதனடிப்படையில் யாழ்பாணத்தில் சமூர்த்தி பெற்று வந்த 74,458 குடும்பங்களுக்கும் சமூர்த்தி முத்திரைக்காக காத்திருக்கும் 9,427 குடும்பங்களுக்கும், மேலும் 36,000 சமூர்த்திப் பயனாளிகளுக்கான உணவுப்பொதிகளும், முதியோர் உதவி வழங்கல் திட்டத்தின் கீழ் 18,371 பயனாளிகளுக்கு, முதியோர் உதவிக்காக காத்திருக்கும் 2,856 பயனாளிகளுக்கும், விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் 7,359 பயனாளிகளுக்கும், சிறுநீரகநோயினால் பாதிக்கப்பட்ட 385 பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 564 மில்லியன் ரூபா நிவாரண உதவியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

மேலும் இதுவரையில் அரசுசார்பற்ற நிறுவனங்கள், நலன் விரும்பிகள் ஊடாக பல மில்லியன் ரூபாய்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு அது பிரதேச சபையின் கண்காணிப்புக் கீழ் அத்தியாவசிய தேவைகள் உடையோர் களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் உதவி செய்ய விரும்பும் நலன் விரும்பிகள் பிரதேச சபையின் மூலம் உதவி செய்தால் உதவி கிடைக்கப் பெறாமல் இருக்கக் கூடியவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று யாழ் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

Leave a Reply