கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது நடமாடிய 2025 பேருக்கு ரெபிட் எண்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரையில் 24 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினரின் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியதாவது இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதியான 24 பேரில் 19 பேர் ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகளிலும், மேலும் 5 பேர் பீ.சி.ஆர் பரிசோதனைகளிலும் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply