நோபல் பரிசினை வென்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப் ஷாயி எனும் யுவதி ஆப்பிள் நிறுவணத்துடன் இணைந்து நாடகங்கள் சிறுவர் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கவுள்ளார்.
ஆப்பிள் Tv பிளஸ் எனும் அலைவரிசையில் அவர் தயாரிக்கும் கதைகள் காண்பிக்கப்பட உள்ளன.
இது தொடர்பில் ஆப்பிள் இன் கோப்ரேசன் நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றினையும் ஏற்படுத்தியுள்ளார்.
பிரபல ஹோலிவூட் நட்சத்திரங்களின் படங்களும் ஆப்பிள் டீ.வி.அலைவரிசையினூடாக திரையிடப்படும் வரிசையில் மலாலா யூசுப்ஸாயி அவர்களின் நிகழ்ச்சிக்காக கிடைத்த அங்கீகாரம் என அவர் மகிழ்வை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.