தற்பொழுது உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாம் வீட்டுக்குள் இருந்து வருகின்ற சந்தர்பத்தில் வெளியில் நம்மலை பாதுகாக்கும் நோக்கில் இருப்பதற்கு இடமில்லாமல், பூர்த்தியான சாப்பாடு இல்லாமலும், உயிரை பணயம் வைத்து நம்மைப் பாதுகாக்க “பாதுகாப்பு படையினர்” முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்கின்றோம் என்பதை நினைக்கும் போதே மன வேதனையாக இருக்கிறது.
மேலும் நம்மைப் பாதுகாக்க கடமையில் ஈடுபடுத்தப் பட்டிருக்கும் பாதுகாப்பு படையினர்களுக்கு எங்களால் முடிந்தவரை ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படையினர் சாப்பிட்டார்களா? குடித்தார்களா? என்பதை நாம் நினைப்பதே கிடையாது. சரி அது ஒரு பக்கம் இருக்க நாம் வீட்டில் அழகான முறையில் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள், மற்றும் குடும்பத்தினர்களோடு சந்தோஷமாக இருந்து விளையாடுகின்றோம்.
அவர்கள் எங்களுடைய வீடுகளுக்கு முன்னாள் நிற்கின்றார்களே யாருக்காக என்றாவது சிந்தித்தோமா?
சரி நண்பர்களே நடந்ததெல்லாம் விட்டு விடுவோம். இதற்குப் பிறகாவது பாதுகாப்பு படையினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக சாப்பாடுகள, குடிப்பான்கள் (தண்ணீர், சர்பத், ரிங்ஸ் வகைகள்.) குறிப்பாக கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொள்ள கதிரை ஒன்றாவது கொடுத்து உதவுவோம்.
ஆக்கம்: அபு மிஸால் அப்ரார்