கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பல இடங்களில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி மக்களை கொரோனா தொற்றுநோயில் இருந்து பாதுகாத்தனர்.

இதனடிப்படையில் இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 20ம் திகதியில் இருந்து சில பிரதேசங்களைத் தவிர ஏனைய அனைத்து பிரதேசங்களில் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு அரச நிறுவனங்கள் வழமைக்கு திரும்புவதற்கு முன் தொற்று நீக்கி விசிரல் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (21) மாலை எக்சன் யுனிடி லங்கா தொண்டார்வு நிறுவனத்தின் அனுசரணையில் மாவட்ட செயலக வளாகத்திலுள்ள சகல அலுவலகங்களிலும் தொற்று நீக்கி விசிறல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply