காத்தான்குடி மாணவனின் உயிரிழப்பு உள்ளம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மிகப்பெரிய சம்பவமாகவே என்னால் நோக்க முடிகிறது!! பொறுப்பற்ற சமூக தலைமைகளே இதட்கான காரணமாக இருக்க முடியும் என்றே கருதத்தோன்றுகிறது!!
ஆசிரியர்கள் நாளைய தலைவர்களை உருவாக்கும் சக்தி வாய்ந்தவர்கள் ஆனால் சரியான கல்வித் தகமை, ஒழுக்கம், கற்றல் கற்பித்தல் பற்றிய சரியான அறிவு மற்றும் அனுபவம் இல்லாத ஆசிரியர்களால் ஒரு எதிர்கால சமூகமே தோற்றுப் போகும் நிலை உருவாகி வருகிறது!!
பண்படாத ஆசிரியர்களால் இன்று நேற்றல்ல பல ஆண்டு காலமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள், அதட்கு இலங்கை முழுவதும் நடந்தேறிய நூற்றுக்கணக்கான சம்பவங்கள் சாட்சி பகிர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
கடந்த வருடம் (2022-நவம்பர்- 11) ஹங்கமவில் உள்ள துடுகெமுனு மகா வித்தியாலயத்தில் கல்வி கட்கும் வெறும் 10தே வயதான (05ம் ஆண்டில் படிக்கும்) மாணவியை 49 வயது ஆசிரியை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித்த தனமாக தாக்கி குழந்தையின் தலையின் பின் புறத்தில் பலத்த காயம் ஏட்பட்டதால் போலீஸ் முறைப்பாட்டின் பின்னர் ஆசிரியை கைது செய்யப்பட சம்பவம் ஒரு சிறு உதாரணமே!!
இதே போன்று பல நூறு சம்பவங்களை இங்கே மேட்கொள் காட்ட முடியும் ஆனால் விடயம் அதுவல்ல!! பாடசாலை மற்றும் மதரஸாக்கள் தொடர்பாக நிர்வாகிகள் தலைவர்கள் மறுபரிசீலனை செய்ய தவறியதே ஒரு உயிரை பறிகொடுக்க காரணம் என்றே கூற வேண்டிய நிலை !!
மாணவர் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது தகாத நடத்தை செய்தாலோ அவருக்கு ஒழுக்கமும் வழிகாட்டுதலுமே தேவைப்படுகிறது மாறாக தண்டனை அல்ல!! ஆனால் மாணவர் மீது விதிக்கப்படும் தண்டனை அவருக்கு உடல் அல்லது உளவியல் ரீதியான பாதிப்பையே ஏற்படுத்துகிறது !!.
இன்றைய பாடசாலை மற்றும் மதரஸாக்களில் வழங்கப்படும் தண்டனைகள் மாணவர்களை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வெகுவாக பாதிக்கவைக்கிறது !! இதை விட இன்னுமொரு படி மேல சென்று சில ஆசிரியர்கள் கல்விப் பாடங்களில் மதிப்பெண்களைக் குறைப்பேன் என மாணவர்களை அச்சுறுத்துவது அதை விட படு மோசமான நடைமுறையாகும்.
அதே போன்று மாணவர்களை கேலி செய்வது, தனிப்பட்ட தவறுக்கு கூட்டுத் தண்டனை அல்லது தண்டனையாக மாணவரை வகுப்பறையில் இருந்து வெளியேற்றுவது போன்று பொதுவாக நடைமுரையில் இருக்கும் தண்டனைகளை பல நாடுகள் சட்ட ரீதியாக தடை விதித்துள்ளது ஆனால் இலங்கையில் இப்படியான தண்டனை முறைகள் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது
சமீபகாலமாக, சரியான வழிகாட்டுதல் மற்றும் சரியான மதிப்பீடு இல்லாத சில ஆசிரியர்களால், மாணவர்கள் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியதாக பல கதைகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே மதரஸாக்களில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக பெற்றோர்கள் அதிகூடிய கவனம் எடுப்பது கட்டயாமானதாகும்!!
அதே போன்று நிர்வாகிகளே !!
மாணவர்களை தண்டிப்பது தொடர்பான உங்களின் சரியான சட்டவரையை என்ன என்பதை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யுங்கள் !!
மார்க்கம் போதிக்கும் ஆசிரியர்கள் அடிப்படை குண நெறிகளை கொண்டிற்குந்தால் மாணவர்களை கை நீட்டி அடிக்கமாட்டார்கள் !!
நன்றி
A. R. Muzammil Bsc (Hons) UK