பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சில நாட்களில் வெளியாகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானியை அமுலாக்காத நிறுவனங்களுக்கு எதிராக தொழில் திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு அவருடைய மேலதிக கொடுப்பனவுகளை சேர்த்து நாளாந்தம் 1,230 ரூபாவாக வேதனம் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply