Covid-19 அச்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று 15.04.2020 புல்மோட்டை சலாமியா நகர் பகுதிகளில் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. சுகயீனமுற்ற வீடுகளுக்கு தவிசாளர் நேரடியாக சென்று குடும்பங்களின் சுகங்களை கேட்டறிந்ததுடன் ஏதாவது உதவிகள் தேவைப்படின் உடனடியாக தொடர் கொள்ளுமாறு தெரிவித்தார்.