கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒரு புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறைக்கான Windows 11 ஆப்ரேட்டிங் சிஸ்டமை (OS) தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு மெய்நிகர் நிகழ்வின் மூலம் மைக்ரோசாப்ட், Windows 11 ஆப்ரேடிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற Build 2021 மாநாட்டில் Windows 11 OS-ன் டீஸர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக தனது புதிய OS-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு தலைமை அதிகாரி பனோஸ் PC-க்கள் மற்றும் லேப்டாப்களுக்கான அடுத்த தலைமுறை ஆப்ரேட்டிங் சிஸ்டஸ்மான Windows 11-ஐ வெளியிட்டார்.

கடைசியாக கடந்த 2015 -ம் ஆண்டு ஜூலை மாதம் Windows 10-ஐ அறிமுகப்படுத்திய பிறகு, கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒரு புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட். விண்டோஸின் “அடுத்த தலைமுறை” என்று அழைக்கப்படும் இந்த Windows 11 அப்டேட், சிறப்பான ஒரு பெரிய மறுவடிவமைப்புடன் வருகிறது. =புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Windows 11 புதிய அம்சங்கள், ப்ரொடக்டிவிட்டி டூல் மற்றும் மிக முக்கியமாக, நவீன PC-க்கள் மற்றும் வொர்க் ஸ்டேஷன்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு க்ளட்டர் ஃப்ரீ (clutter free) லுக்குடன் இருக்கிறது.

மேலும் பெரும்பாலான யூஸர்களுக்கு எரிச்சலூட்டும் “Hi Cortana” வெல்கம் ஸ்கிரீன் மற்றும் லைவ் டைல்ஸ் உள்ளிட்டவை இல்லாமல் வெளிவந்திருக்கிறது Windows 11. வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயல்படும் ரெட்மண்ட் நிறுவனம், மேக்ஒஸ் (macOS) மற்றும் க்ரோம் ஓஎஸ் (Chrome OS) போன்றவற்றிற்கு போட்டியாக இருப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. டச் எனேபிள்ட் லேப்டாப்களுக்கு சமமாக, அதன் சமீபத்திய OS இருக்க வேண்டும் என்ற கணிசமான முயற்சிகளை மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளது Windows 11 OS-ன் தோற்றத்தில் வெளிப்பட்டுள்ளது. தவிர தற்போது Windows 10 பயன்படுத்தி வரும் யூஸர்கள் Windows 11-ஐ இலவசமாக டவுன்லோட் செய்து தங்களது புதிய இன்டர்பேஸாக (interface) பயன்படுத்தி கொள்ளலாம்.

புதிய அப்டேட்டை வழக்கமான அப்டேட் முறையிலேயே யூஸர்கள் செய்து கொள்ளலாம். யூஸர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் Windows10, புதிய ஓஎஸ் வெர்ஷனுக்கு அப்டேட் ஆகி தகுதி உள்ளதா என்பதை pc health check மூலம் அறிந்து கொள்ளலாம். http://window.com/ வெப்சைட்டிற்கு சென்று அப்டேட் செய்யலாம். இது ஒரு ஃபிரெஷ் செட்டப் ஸ்கிரீனில் துவங்கி அனைத்து முக்கிய விண்டோஸ் எலிமெண்ட்டிற்கும் ஒரு புதிய தோற்றம் மற்றும் உணர்வையும் தருகிறது. சமீபத்தில் வெளியான iPadOS போலவே மெனுக்கள் மற்றும் விண்டோஸ்களில் ரவுண்ட் கார்னர்கள் உள்ளன. மேலும் நவீன அனுபவத்தை யூஸர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்ட ஸ்டார்ட் மெனுவை (Start menu) Windows 11 OS ன் நடுவில் காண முடிகிறது.

இதுவரை இடது பக்கத்தில் இருந்த ஸ்டார்ட் மெனு, புதிய OS-ல் நடுவே கொடுக்கப்பட்டிருப்பது முற்றிலும் புதுமையான அனுபவத்தை தருகிறது. லுக்கை மெருகூட்ட புதிய தீம்கள் மற்றும் வால்பேப்பர்களையும் மைக்ரோசாப்ட்டின் Windows 11 கொண்டு வருகிறது. விண்டோஸ் 11 ஒரு புதிய செயல்பாட்டிற்கு ‘ஸ்னாப் லேஅவுட்’ என்று பெயரிட்டுள்ளது. இது அடிப்படையில் மினிமைஸ்-மேக்ஸிமைஸ் பட்டனில் இருக்கும். ஸ்கிரீனின் பல்வேறு பொஷிஷன்களில் ஆட்டோமேட்டிக்காக ஒரு tab-ஐ வைக்க யூஸர்களுக்கு அனுமதி வழங்குகிறது. ஆப்பிளின் மேக்புக்-ஐ போல் தோற்றமளிக்கும் Windows 11-ன் டாஸ்க் பார், கீழ் பகுதியில் காணப்படுகிறது. மேலும் டச் முறைக்கு ஏற்றவாறு ஆப்ரேட்டிங் சிஸ்டம் இருக்கிறது. மைக்ரோசாப்ட் Windows 11 ஆப்ரேடிங் சிஸ்டமில் இரண்டு செயலிகளை ஒரே நேரத்தில் யூஸர்கள் பயன்படுத்த முடியும்.

உற்பத்தி திறனைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் Windows 11-ல் டீஃபால்ட்டாக டீம்ஸ் வீடியோ கான்ஃபரன்சிங் ஆப்பை (Teams video conferencing app) ஒருங்கிணைத்துள்ளது. PC மற்றும் கனக்டட் டிவைஸ்களில் யூஸர்கள் தடையற்ற செயல்திறனை அனுபவிக்க இது அனுமதிக்கும்.வலது புறத்தில் இருந்து புதிய ஸ்கிரீனை பாப்ஸ் செய்யும் விட்ஜெட்ஸ் பட்டனும் (Widgets button) உள்ளது. மைக்ரோசாப்ட் ஸ்டோர் புதிய தோற்றம் மற்றும் இன்டர்பேஸ் அப்டேட்டை பெறுகிறது. மிக முக்கியமாக டெவலப்பர்கள் இப்போது Win32, PDA மற்றும் பல வடிவங்களில் ஆப்களை அப்லோட் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெவலப்பர்களிடமிருந்து எந்த கமிஷனையும் எடுக்க மாட்டோம் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது. இது அடோப் போன்ற டெவலப்பர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாகும்.

By Admin

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.