இலங்கை நுவரெலியா பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் வசந்தகால கொண்டாட்டம் நடைபெற்று வந்தது.
2020ம் ஆண்டிற்கான கொண்டாட்ட வேலைத்திட்டம் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே ஆரம்பமானது. ஆனால் உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமை காரணமாக இந்த கொண்டாட்டம் ஒத்திவைக்க படும் என்று நுவரெலியா மாநகரசபை மேயர் சந்தன லால் கருணாதிலக்க தெரிவித்தார்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் அதிகமாக கூலித்தொழிலாளர்கள் தான் இருக்கின்றனர். இவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு பல முன்னேற்பாடுகளை நாம் செய்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.