இலங்கையில் கொரோனா வைரஸினால் வெளிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும் மலையக பிரதேச சபை ஒரு அறிவித்தலை நேற்று வெளியிட்டது: வெளி மாவட்டங்களில் இருந்து மலையகத்திற்கு வருபவர்கள் உரிய தரப்பினருக்கு தகவல்களை வழங்க வேண்டும்.
நேற்று தலவாக்கலை யில் மக்களின் தகவலுக்கு அமைவாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவு மற்றும் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் ஒளிந்திருந்த 2பேர்களை கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இதற்கு பின்னர் யாரும் ஒளிந்திருந்த தகவல்கள் கிடைத்தால் அவர்களை தனிமைப்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லிந்துலை நகரசபை பகுதியில் எழுவர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் லக்மால் த சில்வா தெரிவித்தார்.