நாடாளுமன்றம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடவுள்ளது.

முற்பகல் 9.30க்கு இன்றைய சபை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளது.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அமைய, இந்த சட்டமூலத்திற்கு ஊடகம், இளைஞர்கள் பாரம்பரியம் மற்றும் குடிமக்கள் தொடர்பான துறை கண்காணிப்பு குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில் குறித்த சட்டமூலத்தை உடனடியாக சமர்ப்பிக்காமல் அதற்கு சிறிய காலத்தை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

நீண்ட விவாதத்திற்கு பின்னர், அதனை நிறைவேற்றுவது குறித்து ஆராயுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply