தொல்பொருள் எச்சங்கள் இருப்பதனால் பொதுமக்கள் உட்செல்லத்தடை எனும் அறிவிப்பு பலகையொன்று குச்சவெளி பிரதேச சபை புல்மோட்டை பிரதான வீதி தொடுவாய் எனும் இடத்தில் திடிரென நாட்டப்பட்டுள்ளமை தொடர்பில் குச்சவெளி மக்கற் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
தாம் கடந்த 50ஆண்டுகளாக தமது பராமரிப்பில் இருந்த காணிகளை அரச உடமையாக்கும் முயற்ச்சியில் இவ்வாறான செயல் நடந்திருக்கலாம் என்று மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காணி உரிமையாளர்கள் இது தொடர்பில் பாரளுமன்ற உருப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த இடத்திற்க்கு வருகை தந்த அவர் காணி உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரங்களை பார்வையிட்டு அது தொடர்பில் அரசாங்க அதிபரை சந்திப்பதாக வாக்களித்தார்.
மேலும் மக்கள் இது தொடர்பில் பேசுகையில் இந்தக்காணி வலாகத்தில் தொல்பொருளுக்கான எந்தவிதமான எச்சங்களும் புலப்படவில்லையென்றும் காடுகள் இல்லாத நிலப்பரப்காக இருப்தனையும் சுட்டிக்காட்டினார்கள்.