கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
விடுமுறையை முடித்துவிட்டு துபாய் நாட்டிட்கு திரும்பினேன், எனது துபாய் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகி இருந்த நிலையில் எனது நண்பன் ஒருவரோடு வெளியில் செல்ல இரவு 08:00 மணியளவில் தீர்மானித்த பின்னர் license புதுப்பிக்க வழியை தேடினேன்.
மிக அருகில் உள்ள கண் பரிசோதனை நிலையத்தில் பணத்தைக் கட்டி டெஸ்ட் முடிந்த அடுத்த நொடியில் துபாயின் போக்குவரத்துக்கு இணையத்தளத்தில் அவர்களே பதிவேற்றி விட்டு ஒன்லைன் மூலம் புதுப்பியுங்கள் என்றதும் உடனே எனது கைய்யடக்க தொலைபேசியில் பணத்தை கட்டி விட அடுத்த நொடியில் எனது license டிஜிட்டல் வடிவில் வந்து சேர்ந்தது, ஐந்தே நிமிடத்தில் விடயம் நிறைவானது. எமது பயணமும் நன்றாக அமைந்தது!!
ஒரிஜினல் license மறு நாள் போஸ்ட் ஆபீஸ் மூலம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கப்பட்டது, இது தான் துபாய் !!!
சரி விடயத்திட்கு வருவோம்!
✅ எமது நாட்டிலும் தபாலகங்கள் இருக்கிறது ஆனால் ஏதாவது அரச ஆவணங்களை ஓரிரு வாரங்களிலாவது பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறதா?
✅ கணனி மென்பொருள் தயாரிப்பதில் இலங்கைக்கு தனி சிறப்புண்டு !! ஆனால் சொந்த நாட்டு மக்களுக்கு ஒரு சேவை சரியாக வழங்க வழி உள்ளதா ?
ஆனால் ஆச்சரியம் என்ன தெரியுமா? ஆசிய கண்டத்தில் அதிக அரச ஊழியர்களைக் கொண்ட நாடு நமது இலங்கை தான் ஆனால் எந்தவொரு அரச சேவையும் அவ்வளவு விரைவாக பெற்றுக்கொள்ள முடியாது
இலங்கை பெட்ரோலிய அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா சொன்ன ஒரு விடயம் என்னை ஆச்சரியப்படுத்தியது “இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டும் 26000 பேர் பணிபுரிகிறார்கள் ஆனால் அங்கு சேவையாற்ற வெறும் 5000 பேர் மட்டுமே போதும்” இப்படி நமது நாட்டில் இயங்கும் எல்லா துறைகளிலும் அதிகளவான ஆட்களே உள்ளனர் ஆனால் சேவை துரிதமாக இல்லை!
ஒட்டுமொத்த அரச சேவையில் சுமார் பணிணைந்து இலட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள், அதாவது ஒவ்வொரு 14 நபருக்கும் ஒரு அரச ஊழியர் இருக்கிறார் !!! ஆனால் சேவைகள் ???
அடுத்த தொடரில் நமது குச்சவெளி பிரதேச செயலக சேவை ஒரு அனுபவ பதிவு எதிர்பாருங்கள் !!
A. R. Muzammil BSc (Hons) UK
Business Analyst & Journalist
Member of Computer Society of Sri Lanka
📳 0777002225