தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக குச்சவெளி பிரதேசத்தின் வடலிக்குள கிராமத்தில் குடி நீர் தட்டுப்பாடு காணப்படுவதாக அப்பகுதியின் பள்ளிவாயல் நிர்வாகம் குறித்த வட்டாரத்திற்கு பொறுப்பான குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் A.S.M.சாஜித் அவர்களின் ஊடாக பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதற்கமைய 17.06.2020 ம் திகதி இன்று அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நீரை வழங்குவதற்காக அல் குதா ஜும்ஆ பள்ளிவாயலின் வளாகத்தில் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் தலைமையில் கௌரவ உப தவிசாளர் A.S.M.சாஜித் அவர்களின் மேற்பார்வையில் குழாய்க்கிணறு அடித்து கொடுக்கப்பட்டது. இதன்போது பள்ளிவாயல் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply