டெல்லியில் தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூடி நாட்டில் உள்ள ஊரடங்கு உத்தரவை பின்பற்றி நடக்கவேண்டும் என நிர்வாகிகளுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.
நாட்டின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர்.இந்தநிலையில் கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 24-ம் தேதி நள்ளிரவு தொடக்கம் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.
கரோனா வைரஸைத் முற்றாக தடுக்க சமூக விலக்கல் (Social Distancing) தேவை என்பதால், இந்தியாவின் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.இந்த நிலையில் நிஜாமுதீன் மர்கஸில் 1000கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 24 பேர் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கிருந்த 1000கும் மேற்பட்டவர்களையும் மருத்துவமனை மேலும் தனிமைப்படுத்துதல் மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து மர்காஸைாவை உடனடியாக மூட வேண்டும் என போலீஸார் பணித்துள்ளனர். ஆனால் அதற்கு சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை நேரில் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கண்டிப்பாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதுதொடர்பான வீடியோவையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.