பிறந்து 55 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (05) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.

மேலும் குறித்த சிறுமியின் பெற்றோர் தற்போது தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது உறவினர்கள் குழந்தையின் ஜனாஸாவினை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இதே சந்தர்பத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக இறையருளால் எரியூட்டாமல் தடுக்கப்பட்டு பிரேத அறையில் பாதுகாக்கப்பட்ட பல ஜனாஸாக்களும் இன்று ஓட்டமாவடி பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது.

Leave a Reply