ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா கூறுகையில் எந்த நடவடிக்கைக்கும் தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் லடாக் எல்லையில் சீன விமானப்படையின் மாறான நடவடிக்கைகளை இந்தியா கண்டுபிடித்ததன் காரணமாகவே எல்லையை நோக்கி போர் விமானங்கள் சென்றதாகவும் விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.
மேலும் சீனா எல்லைப் பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.