நிஜத்தின் நிழல்!!

அந்திப் பொழுதின் அழகை ரசித்தபடி தன் சக நண்பிகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள் மாலா.

மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாலாவுக்கு இரண்டு சகோதரர்கள். கடைக்குட்டியாக பிறந்த இவளை தன் பெற்றோர் மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தனர். மாலா சிறு வயது முதலே சுட்டித் தனமும், திறமைசாலியுமாகக் காணப் பட்டாள்.

மாலாவின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் காணப்பட்ட போதிலும் தன் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டனர் மாலாவின் பெற்றோர்கள்.

தன் பெற்றொரின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் மாலாவின் உள்ளத்தில் நிறைந்து காணப்பட்டது. அவ்வெண்ணங்களை மனதில் சுமந்தபடி நன்றாகப் படித்து வந்தாள். நல்ல பெறுபேறுகளையும் பெற்றாள்.

இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது அவளது கல்விப் பயணம். அவளது தந்தை ஒரு கூலித்தொழிளாலி அன்றாடம் உழைக்கும் பணம் அவர்களுடைய மூன்று வேளை உணவுக்கே போதாமல் இருந்தது. இப்படி இருக்கையில் எவ்வாறு பிள்ளைகளை படிக்க வைப்பது என்று யோசித்த மாலாவின் தந்தை வெளிநாடு செல்ல ஆயத்தமானார்….

இத்தருணத்தில் தான் மாலாவின் தாய் “என்னங்க நீங்க மட்டும் போய் எப்படிங்க இந்த பிரச்சினைகளயெல்லாம் முடிக்கிற? நீங்க மட்டும் போய் உழச்சா சாப்பாட்டுக்கு மட்டும்தான் போதும். மறுபடியும் வந்து இப்படித்தான் தொழில் ஒன்னுமில்லாம கஸ்டப்படனும்.அதனால நானும் உங்ககூட வார அப்பதா ஒரால் ஒழைக்கிறத சாப்பிட்டாலும் ஒரால் ஒழைக்கிறத கொண்டு வந்து தொழிலுக்கு ஏதாவது செய்யாலாமே” என்றாள்.

அவளது தாய் கூறிய விடயத்தில் சரிகண்ட மாலாவின் தந்தை “அதுவு சரிதா அப்ப நம்ம ரெண்டு பேரும் கப்பில்சா போகலாமே”என்று முடிவு கூறினார். இருவரின் ஆலோசனையின் படி இருவரும் வெளிநாடு செல்ல ஆயத்தமாகினர்.
மாலா தரம் ஏழில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போது அவளது பெற்றோர் அவளைப் பிரிந்து வெளிநாடு சென்றனர்…..

தொடரும்….

✍️ ஊடகவியலாளர் எம். எஸ் KVC

By Admin

Leave a Reply