கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நடவடிக்கைகளுக்கு பல நாடுகளில் இருந்தும் பல விதமான உதவிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் கிடைக்கின்றன.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக சிங்கப்பூர் மகாகருணா பௌத்த சங்கத்தின் தலைவரும் லங்காராமாதிபதியுமான சங்கைக்குரிய கே.குணரத்ன தேரர், இலங்கை உயர் ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்த்தன மற்றும் Humanity Matters சங்கத்தின் தலைவர் Ong Keng Yong ஆகியோர்கள் சில பொதிகளை நேற்று (16) அன்பளிப்பு செய்தனர்.
அந்த பொதிகளில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மேலும் வெப்பமானி போன்ற உபகரணங்களாகும். இதன் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.
இந்த நிகழ்வில் சர்வதேச விவாகரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹண அபேவர்த்தன ஆகியோர்கள் இப்பொதிகளை பொறுப்பேற்றனர்.