2 நாட்களில் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன், தேசிய லொத்தர சபை 25 மில்லியன், தேசிய சேமிப்பு வங்கி இன்னும்மின்சார சபை பொறியியல் சங்கம் ஆகியன தலா 2.5 மில்லியன், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு 02 மில்லியன், மெலிபன் பிஸ்கட் மெனுபெக்சரீஸ் நிறுவனம் 10 மில்லியன், மாத்தறை பௌத்த பாதுகாப்பு சபை 01 மில்லியன், நேசர்ஸ் பியுட்டி கிரியேசன்ஸ் நிறுவனம் 5 மில்லியன், மேலும் சில தனவந்தர்கள் மூலமாகவும் கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
314 மில்லியன் ரூபாவாக இருந்த நிதி தற்போது 380 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இலங்கை வங்கியில் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டிலிருந்து அன்பளிப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
மேலதிக விபரங்களுக்கு: +94 112354479, +94 11354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ள முடியும்.