உலகளாவிய ரீதியில் அதிகமான இடங்களில் கொரோனா வைரஸ் காரணமாக பல உறவுகள் எம்மை விட்டு விட்டு பிரிந்து விட்டார்கள்.
இந்த அடிப்படையில் இலங்கையில் ஆரம்ப காலத்தில் கொரோனா வைரஸின் பாதிப்புகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள்.
ஆனாலும் தற்போது கொரோனா வைரஸ் இலங்கையில் ஆட்டிப்படைக்கிறது என்று கூட சொல்லலாம்.
இதனடிப்படையில் நேற்றைய தினம் மாத்திரம் கொரோனா வைரஸ் காரணமாக 09 பேர்கள் உயிரிழந்தார்கள்.
இலங்கையில் மொத்தமாக கொரோனா வைரஸ் காரணமாக 83 மரணங்கள் பதிவாகியுள்ளது.