கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளன.
ஆராச்சிக்கட்டுவ ரஜகதளுவ ரோமன் கத்தோலிக்க பொது மயானத்தில் அவர் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளது.
கடந்த 25ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனம், பார்வூர்தி கொள்கலன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து காயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் பாதுகாப்பு றாகமை அவரது, அதிகாரியும் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஜுப் ரக வாகனத்தின் சாரதி றாகமை போதனை வைத்தியாசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்தநிலையில் வெலிசர நீதவான் துசித தம்மிக்க றாகமை போதனா வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் சென்று அவரை பரிசோதித்ததன் பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியின் தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.