பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2000ம் ஆண்டு சுசன்னே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனாலும் 2013ம் ஆண்டு இருவருக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 2014ம் ஆண்டு விவாகரத்தும் பெற்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கையில் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 21ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷன் தனது பிள்ளைகளுடன் வீட்டில் இருந்து வருகிறார். ஆனாலும் தனது பிள்ளைகள் வீட்டில் தனிமையை உணரக்கூடாது என்பதற்காக சுசன்னே ஹிருத்திக் ரோஷனின் வீட்டிற்கு வந்துள்ளார் என்பதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி தனது மனைவிக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.