மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல விதமான உதவிகளை மேற்கொண்டு வருகின்ற சந்தர்பத்தில் விளையாட்டு வீரர்களும் உதவி செய்ய முன்வந்துள்ளார்கள்.
01- அர்ஜென்டினாவின் கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி (Lionel Messi) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக 8.27 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
02- மான்செஸ்டர் கால்பந்து கிளப்பின் மேலாளரும், பார்சிலோனா அணியின் முன்னாள் வீரருமான பெப் கார்டியாலோ (Pep Guardiola) தன் பங்குக்கு ரூ.8.27 கோடியை வழங்கி இருக்கிறார்.
03- முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்(Cristiano Ronaldo), அவரது ஏஜென்டான ஜோர்ஜ் மென்டசும் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்ச்சுகல் நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு தலா ரூ.8.27 கோடியை வழங்கியுள்ளனர்.
04- சுவிர்சர்லாந்து நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு டென்னிஸ் நட்சத்திரம் ரபேல் நடால் (Rafael Nadal) மற்றும் அவரது மனைவி மிர்கா ஆகியோர் ரூ.7¾ கோடி நிதி உதவி அளிக்க முடிவு செய்துள்ளனர்.