இந்தியாவின் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன் அண்மைய காலமாக சிறப்பாக விளையாடி வருகின்றார்.
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் இருந்த அமீர் ஹுசைன் விபத்தொன்றில் தனது கைகளை இழந்துள்ளார்.
இந்த நிலையில் தனது முயட்சியை கைவிடாது பல தடைகளை தாண்டி அவர் தற்போது பரா கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.
கன்னத்திற்கும் கழுத்திற்கும் இடையில் மட்டையை வைத்து துடுப்பாட்டம் செய்து வருவதோடு அவர் தனது கால்கள் மூலமாக பந்து வீசுகின்றார்.
மேலும் அவர் ஜம்மு காஷ்மீர் பரா கிரிக்கெட் அணியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன் அமீர் ஹுசைன் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தன்னை போல இருக்கும் 100 மாற்றுதிறனாளிக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது