2018ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலியா கெப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்தது. மேலும் ஸ்டீவன் சுமித் யின் கெப்டன் பதவியும் பறிபோனது.
ஸ்டீவன் சுமித்துக்கு 2 ஆண்டுகள் கெப்டன் பதவி எதுவும் வழங்கப்படாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த நிலையில் ஸ்டீவன் சுமித்துக்கு கேப்டன் பதவி வகிக்க விதிக்கப்பட்ட 2 ஆண்டு கால தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இனி அவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை ஏற்க முடியும்.
ஆனாலும் இந்த நிலையில எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாத நிலையில் ஸ்டீவன் சுமித் விடயமாக எந்த முடிவும் எட்டப்படவில்லை.