குச்சவெளி பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட பெரிய ரக,மற்றும் நடுத்தர வாகன சாரதிகளுக்கான ஊரடங்கு சட்ட அமுலின் போது வாகனம் செலுத்துவதற்க்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது. இது தொர்பில் குச்சவெளி பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொன்டு கேட்டபோது..நூற்றுக்கனக்கான விண்ணப்பங்கள் வந்த போதிலும் தாம் அனைத்திற்க்கும் அனுமதி பத்திரம் வழங்கவில்லையென்றும் கிராம சேவையளர்,மற்றும் பிரதேச செயலாளர்களின் அனுமதிக்கு அமைவாக சுமார் 25 வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதிப்பத்திரம் பொலிஸ் நிலையத்தினூடாக வழங்ப்பட்டதாக தெரிவித்தார் அவற்றுள் அத்தியவசிய பொருட்களுக்கான லொரி,காய்கறி,மீன் லொறி..போன்றவற்றுக்கான அனுமதிகளே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply