குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் முல்லைத்தீவு மாவட்டமும், மேற்கு எல்லையை அண்டி பதவிசிறிபுர, கொமரங்கடவெலை, மொரவெவ, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், தெற்கில் திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. 438 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 24 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 33,100 ஆகும். இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இப்பிரிவில், 21,307 முஸ்லிம்களும் , 10,553 இலங்கைத் தமிழரும், 1,193 சிங்களவரும், 40 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 76 பேர்.