இன்று 22/02/2021 திங்கள் கிழமை பொதுமக்கள் நாளாகும் இன்றைய தினம் மக்களின் வருகை மிக அரிதாகவே காணப்பட்டது.
தற்போதய Covid19 சூழ்நிலை காரணமாக பிரதேச செயலாளர் தனது காரியாலயத்தை விட்டு வரவேற்ப்பு மன்டபத்திலேயே மக்களை சந்தித்தார்.
ஆனால் அங்கு மிக குறைந்த பொது மக்களே காணப்பட்டனர் இது தொடர்பில் அங்கு வருகை தந்திருந்த ஒரு முதியவரை கேட்டபோது அவர் எமக்களித்த பதில் ..தம்பி முன்னையெல்லாம் பொதுமக்கள் சந்திப்பு நாளில் மிக அதிகமான கூட்டம் காணப்படும் ஆனால் மக்கள்..இங்கு வந்து அவர்களின் காரியங்கள் நடக்காததாலும் அவர்களின் நேர காலங்கள் வீணடிக்கப்பட்டு நாளை வா அடுத்த வாரம் வா என்று அலைக்கழிப்பதாலும் மக்களுக்கு வெறுத்துப்போய் விட்டது அதனால்தான் இங்கு கடந்த வருடத்தில் இருந்த மக்கள் கூட்டம் தற்போது காண்பதற்க்கில்லை என்றார். மேலும் அவர் கூறுகையில் தற்ப்போது காணிப்பிரச்சினைக்காகவே மக்கள் வரவேண்டி உள்ளது அப்படி வருகின்றவர்களுக்கு பிரதேச செயலாளர் உங்களுக்கு என்ன ஆவணம் உள்ளது? என்று கேட்கின்றார்..கடந்த 30வருடகாலமாக தாம் வசித்து வருவதாகவும் தமக்கு பிரதேச செயலகத்தில் பல தடவை விண்ணப்பித்தும் அனுமதிப்பத்திரம் வழங்காமல் தற்போது என்ன? ஆவணங்கள் உள்ளது என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது இவ்வாறு எம்மை வெறுப்புக்குள்ளாக்கி மனச்சோர்வோடு மக்கள் செல்லும் காட்சியை நாம் காணக்கூடியதாக உள்ளது இது போன்று இன்னும் அடிக்கிக்கொன்டே போகலாம்..பிரதேச செயலகம் செயலாற்றவில்லை என்றால் பொதுமக்களுக்கு வேறு ஒருதேவையும் இல்லையல்லவா? என்று முடித்தார் அவர்!!!
இது தொடர்பில் பிரதேச செயலக ஊளியர் சிலரை கேட்டபோது இன்றைய தினம் சுமார் 30 தொடக்கம் 50 பேர் வரை வருகை தந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.