சர்வதேசத்துக்கு ஒரு சவாலாக விளங்குகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் மற்றும் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் S.A.C.M.நசார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முதல் கட்டமாக குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை 4ம் வட்டாரத்தின் 13 ம் கட்டை, 14 ம் கட்டை பகுதிகளில் வாழ்கின்றன முஸ்லீம் மற்றும் சிங்கள குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு புல்மோட்டை அல்-மதினா சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் மற்றும் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் S.A.C.M.நசார் சனசமூக நிலையத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள், பிரதேச சபையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் இந்நிகழ்வினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் S.A.C.M.நசார் மற்றும் சனசமூக நிலையத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் இதனைத் தொடர்ந்து ஏனைய பிரதேசங்களிலும் சனசமுக நிலையங்களைக் கொண்டு பிரதேச சபையின் மேற்பார்வையில் நிவாரண பொருட்கள் வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.