தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் எமது நாட்டிலும் தற்போது 102 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பில் மிக அக்கறையுடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஊரடங்கு உத்தரவுக்கு மதிப்பளித்து தகுந்த காரணமின்றி வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் குறிப்பாக இளைஞர்கள் உரிய காரணம் இன்றி வாகனங்களில் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டியக்கொள்வதுடன் மேலும் தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்வதுடன் அவசரதேவையாக வெளியே செல்வதாயின் கட்டாயம் தனித்தனியே தங்களுக்கான முகக் கவசங்கள் (Face Mask) அணிந்துகொள்வதுடன் தங்களின் பாதுகாப்பினை முன்னுரிமைப்படுத்தி செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒவ்வொருவரும் இவ் வைரஸிலிருந்து மீண்டு வருவதற்கு செய்ய வேண்டியது ஒரே விடயம் தான் அதாவது தனிமைப்படுத்தப்பட்டு வைரஸ் பரவாமல் இருப்பதே இந்த நோயில் இருந்து மீள கூடிய மிக உச்சகட்ட நடவடிக்கையாகும் எனவே பிரதேச மக்களை நீங்கள் இவ் விடயங்களை கவனத்தில் கொண்டு செயற்படுமாறும் அத்துடன் இவ் வைரஸிலிருந்து மீள்வதற்கு இறைவனிடம் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவசர தேவைகள், மருத்துவ தேவைகள் ஏற்படின் தொடர்பு கொள்ளவும்
A.முபாரக்
தவிசாளர்
குச்சவெளி பிரதேச சபை
0713283300