தற்போது நாட்டை அச்சுருத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் பல பிரதேசங்களில் பொருளாதாரங்கள் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் சில பகுதிகளுக்கான வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. அதற்கமைய எமது பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை நான்காம் வட்டாரத்தில் தென்னமரவாடி பகுதியில் உள்ள மக்கள் உணவு பொருட்களை பெற்றுக் கொள்வதில் மிகவும் சிரமப்படுகின்றதுடன் சமைப்பதற்கான பொருட்களை கொள்வனவு செய்வதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மேலும் கடந்த சில நாட்களாக சமைப்பதற்கு கூட மீன்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தவிசாளரின் கவனத்தில் கொண்டு வந்ததற்கு அமைய இன்று 04.04.2020 அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் சொந்த நிதியின் கீழ் அம் மக்கள் சமைப்பதற்கான மீன் மற்றும் உணவுகள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

Leave a Reply