.தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றதுடன் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இதே போன்று குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட குச்சவெளி ஜாயா நகர் மக்களும் பல சிரமங்களை எதிர்கொள்வதாக அவ் வட்டாரத்தின் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் A.C.M.மீசான் அவர்களினூடாக தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கமைய இன்று 18.04.2020 ம் திகதி அப் பகுதியிலுள்ள மக்களுக்கு குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் A.C.M.மீசான் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஜாயா சனசமூக நிலையத்தின் ஏற்ப்பாட்டில் குச்சவெளி ஜாயா நகர் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஜாயா சனசமூக நிலையத்தின் நிருவாகிகள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply