மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் இன்று (16) மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திசையிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும், களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்த ஏனையோரும் மண்டூர் மற்றும் எருவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற ஸ்த்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளாக வாகனங்களையும், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

Leave a Reply