கணவனை கழுத்தறுத்து படுகொலை செய்த மனைவி, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் கண்டி, கட்டுக்கஸ்தோட்டை யட்யாவல பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.குடிபோதையில் வந்திருந்த நபர், மனைவியுடன் கடுமையாக சண்டையிட்டதை அடுத்து, மனைவி நடத்திய தாக்குதலிலேயே 42 வயதான நபர் படுகாயமடைந்துள்ளார்.இதனையடுத்து அவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவருகின்றது.