இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் அதிக தொற்று தன்மை கொண்ட இந்த வைரஸ் (ஒமைக்ரான்)உலகளவில் பரவி வருகிறது.
ஒமைக்ரான் மிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஏற்க முடியாது. அதனை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம்.
ஐரோப்பா தற்போது கொரோனா பரவலின் மையமாக உள்ளது. கடந்த வாரம் மாத்திரம் 50 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசியால் கொரோனாவின் தீவிரத் தன்மை உலகளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கொரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா முடிவுக்கு வரும் என்று மருத்துவ வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.