சீனாவின் மூத்த மருத்துவ அதிகாரி ஜோங் நன்ஷான், “உலக நாடுகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே தற்போது சீனாவில் கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நாடுகளும் கூட்டு முயற்சி செய்தால் கொரோனா மறைந்துவிடும்” என்றுள்ளார்.
சீனாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 80,000-க்கும் அதிகமானதாக உள்ளது. இதுவரையில் கொரோனாவுக்குப் பலியானோரின் எண்ணிக்கை சுமார் 3,000-க்கும் அதிகம்.