இலங்கையில் அவசரகால நிலையில் அனுமதிப்பத்திரம் விடயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வின் ஆலோசனைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமசிங்க புதிய முறையொன்றை வகுத்துள்ளார்.
அவசரகால சட்ட அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக நான்கு வழிமுறைகளை அறிவித்துள்ளது.
01- பொலிஸ் தலைமையகத்தின் ஊடாக வழங்குதல்.
02- மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் மூலம் வழங்குதல்.
03- தொகுதி பொறுப்பு பொலிஸ் அத்தியட்ச்சகர் அலுவலகத்தின் மூலம் வழங்குதல்.
04- பொலிஸ் நிலையத்தின் மூலம் வழங்குதல்.