உம்ரா விசா மூலம் சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் ஜித்தா விமான நிலையம் மூலமாகவே வர முடியும் மற்றும் ஏனைய விமான நிலையத்தின் ஊடாக வர முடியாது என இலங்கையில் இயங்கும் ரவல் ஏஜண்டுகள் மற்றும் ஏனைய டிகடிங் முகவர்கள் சிலர் உறுதியாக தெரிவித்தனர்.

அதனையும் மீறி ஜித்தா விமான நிலையம் தவிர்ந்த ஏனைய விமான நிலையத்திற்கு சென்றால் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவீர்கள் என எச்சரிக்கையும் செய்யப்பட்டது.

இலங்கை விமான நிலையத்தை தொடர்புகொண்டு குறித்த தகவல் உண்மையா என வினவிய பொழுது சிலர் ஆம் என கூறினர் பின்னர் இன்னுமொரு நேரத்தில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியாக கூற முடியாது எனத் தெரிவித்தனர்.

உத்தியோக பூர்வ பதிலை எதிர் பார்த்து மின்னஞ்சல் மூலம் விபரத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டு நான் அனுப்பிய email க்கு இன்று வரை இலங்கை விமான நிலைய பொறுப்பதிகரிகள் பதில் வழங்கவில்லை. (சந்தேகமான விடயத்தை தீர்ப்பது இவர்களின் கடமையல்லவா?)

சரி, விடையத்தை றியாத் விமான நிலையத்தை தொடர்புகொண்டு வினவிய பொழுது சரியான தகவல் அங்கிகும் கிடைக்கவில்லை, மீண்டும் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சின் இனையத்தளத்தை நோக்கிய பொழுது அங்கு மிகத்தெழிவாக “எந்த விமான நிலையத்தினூடாகவும் பிரவேசிக்க முடியும்” என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது, அதனை ஆதாரமாக கொண்டு “றியாத்” விமான நிலையத்திற்கே டிக்கெட் முன்பதிவு செய்து அல்லாஹ்வின் உதவியோடு எந்தவொரு பிரச்சனைகளுமின்றி பயணம் சிறப்பாக நிறைவடைந்தது.

By Admin

Leave a Reply