இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கேற்ப இருக்கிறது என்று நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேசசாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

மேலும் நான்கு மாதங்களுக்கு அரிசி, மரக்கறி உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எரிபொருள், மருந்துப் பொருட்கள் தவிர ஏனைய பொருட்களை இறக்குமதை இரத்து செய்யவும் வரையறைக்கு உட்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் வலுவான உற்பத்தியை மேற்கொள்ளும் பொருட்டே அரசாங்கத்தால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாவும் தெரிவித்தார்.

Leave a Reply