இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும் அடுத்த நாடுகளை விட இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது.

இன்றுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் உறுதி செய்யப்பட்டவர்கள் 241ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில் இதே போன்று இன்றைய தினம் சுமார் 530 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply