இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமைகளுக்கு முடிவுகட்டும் நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம் கொள்கிறது.

2015ம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கான அனுசரணையை இலங்கை அரசாங்கம் விலக்கிக் கொண்டமை கவலைக்குரியது.

Leave a Reply