நாட்டில் நிலவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கூடுதலாக மனிதர்கள் ஒன்று கூடக்கூடிய இடங்களை இலங்கை அரசாங்கத்தின் உத்தரவின்படி மூடப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கள் குறைந்த நிலையில் கட்டம் கட்டமாக அதனை மீள ஆரம்பித்து வருகின்றார்கள்.

அதில் முக்கியமானது மத வழிபாட்டுத் தலங்கள் இதனை இந்த மாதம் (ஜூன்) 12ம் திகதி வெள்ளிக்கிழமை மீள் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • சுகாதார பாதுகாப்பு தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து எத்தகைய மதவழிபாட்டுத் தலங்களிலும் ஒன்றுகூடக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
  • இருப்பினும் சமூக இடைவெளியை பாதுகாத்து 50 தனிநபர்கள் ஒன்றுகூடக்கூடிய இடவசதி இல்லாத மதவழிபாட்டுத் தலங்களில் பொதுவாக அந்த நிலப்பகுதியில் கூடியிருக்கக்கூடிய எண்ணிக்கையில் அரைவாசிக்கு மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply