பல ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினை எல்லோரும் அறிந்த விடயமாகும்.

ஆனால் இப்போது நேபாளம் தன்னுடைய நாட்டு வரைபடத்தை (Map) வெளியிட்டுள்ளது.

இந்த வரைபடம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் புதிய வரைபடத்திற்கு ஆதரவு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.

முன்னாள் இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது.

மேலும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்த வாய்ப்பையும் நேபாளம் வழங்கவில்லை.

Leave a Reply